மாவட்டங்களைப் பிரிப்பதில் மக்களுக்குப் பயன் இருக்காது என்றும், இந்தப் பிரிவினைகள் வெறும் அரசியல் லாப நோக்கத்திற்காக மட்டுமே அமல்படுத்தப்படுகிறது என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சகாயம், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.
உண்மையில் எடப்பாடி அரசு மாவட்டங்களைப் பிரிப்பது, அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும், விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். பொதுமக்களை பொறுத்தவரை, மாவட்டங்களை பிரித்தால் என்ன, பிரிக்காமல் இருந்தால் என்ன என்று விரக்தியின் விளிம்பிலேதான் உள்ளனர் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.