இந்தியா

இடைத்தேர்தல் செலவுக்காக ரூ. 50 கோடி கேட்டு மிரட்டல்! : ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!

அம்ருதஹள்ளி காவல்துறை ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

இடைத்தேர்தல் செலவுக்காக ரூ. 50 கோடி கேட்டு மிரட்டல்! : ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் விஜய் டாடா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் ஒன்றிய கனரகத்துறை அமைச்சர் குமாரசாமி மற்றும் JD(S) பிரமுகர் ரமேஷ் கவுடா ஆகியோர் மீது அம்ருதஹள்ளி காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

விஜய் டாடாவின் புகார் மனுவில், “சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சி பிரமுகர் ரமேஷ் கவுடா என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நிகில் குமாரசாமி தேர்தல் செலவுக்கு ரூ.50 கோடி வழங்கும்படி கூறினார். மேலும் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 கோடி கேட்டார். அதற்கு நான் தற்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேட்கும் அளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறினேன். அதற்கு குமாரசாமி, பணம் கொடுக்கவில்லை என்றால் வியாபாரம் நடத்த முடியாது என்று மிரட்டினார்.

இடைத்தேர்தல் செலவுக்காக ரூ. 50 கோடி கேட்டு மிரட்டல்! : ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!

ஏற்கனவே ரமேஷ் கவுடா கோவில் கட்டுவதாக கூறி ரூ.5 கோடி பணம் வாங்கினார். தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். எனவே இது தொடர்பாக குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி காவல்துறை ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது BNS 3 (5) (புண்படுத்தும் வகையில் பேசுவது), 308 (2) (வழிப்பறி), 351 (2) (மிரட்டல்) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் மீது நில முறைகேடு வழக்கு பதிவாகி இருந்த நிலையில், தற்போது மிரட்டல் புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவாகி இருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories