ஒடிசா மாநிலம், பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் அதே பகுதியில் உணவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு அண்மையில்தான் ராணுவ அதிகாரியுடன் திருமண நிச்சயமாகியுள்ளது.
இந்நிலையில், இவரது உணவகத்தில் சில இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். இது குறித்து பெண் வழக்கறிஞர் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது, போலிஸாருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த காவல் ஆய்வாளர் உட்பட ஆண் காவலர்கள் பெண் வழக்கறிஞரின் உடைகளை கிழித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
பிறகு அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையின் இந்த கொடூர சம்பவம் வெளியே வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும் இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் பா.ஜ.க ஆட்சியை விமர்சித்து வருகின்றனர்.