ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பெய்த அதிகனமழை காரணமாக சுமார் 110 கிராமங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. நேற்றைய (செப்டம்பர் 1) நாள் மட்டும் சுமார் 28.5 செ.மீ அளவு மழை நீர் பதிவானது.
இதனால், இரு மாநிலங்களிலும் இயல்புநிலை கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், அதிகனமழையால், ஆறுகள் நிறைந்து பலர் ஆற்றில் அடித்துச்செல்வது போன்ற காணொளிகளும் இணையத்தில் பரவி, கூடுதல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் 1 இலட்சம் ஹெக்டருக்கும் மேலாக விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 110 கிராமங்களின் மழை நீர் சூழ்ந்துள்ளன.
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை விடப்பட்டு, சுமார் 21 தொடர்வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஆந்திரா, தெலுங்கானாவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்கனவே, 12 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை ஆந்திராவிற்கு விரைந்துள்ளது.
இரு மாநில முதல்வர்களும் அவசர கால நடவடிக்கைகளாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.