இந்தியா

சொகுசு கார் ஓட்டிவந்த சிறுவன் : 2 பேர் பலி - விமர்சனத்திற்கு உள்ளான நீதிபதி தீர்ப்பு!

மாகராஷ்டிராவில் சிறுவன் ஓட்டிவந்த சொகுசு கார் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு கார் ஓட்டிவந்த சிறுவன் : 2 பேர் பலி - விமர்சனத்திற்கு உள்ளான நீதிபதி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்திற்குட்பட்ட கல்யாண் நகர் பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி சம்பவ இடத்திலேயே 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் விபத்து ஏற்படுத்திய சிறுவன் குறித்து விசாரித்தபோது, பிரபல ரியல் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அங்கு மது குடித்துள்ளார்.

பிறகு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி செல்லும்போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மே 17 ஆம் தேதி நடந்துள்ளது. பின்னர் சிறுவன் ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி,15 நாட்கள் போக்குவரத்து போலிஸாருடன் பணியாற்ற வேண்டும், சாலை விதிகள், விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் 300 வார்த்தையில் கட்டுரை எழுத வேண்டும், மது பழக்கத்தை விட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். தற்போது இந்த ஜாமீன் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு உயிரை எடுத்தவருக்கு 300 வார்த்தைகளில் கட்டுரை மட்டும் தண்டனையாகிவிடுமா? என சமூகவலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் சிறுவனுக்கு பிரியாணி, பீட்சா வழங்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories