உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சிங். இவருக்கும் ஜோகேந்திர குமார் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பிரகிக்கு ஜோகேந்திர குமாரின் வீட்டார் பூஜா சிங்கை அதிக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இதன் காரணமாக மனவருத்தத்தில் இருந்த பூஜா கடந்த டிசம்பர் 10-ம் தேதி தன் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜோகேந்திர குமாரும், அவரின் பெற்றோரும்தான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தங்கள் மக்களைக் கொன்றுவிட்டதாக பூஜாவின் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பூஜா சிங்கின் உடலை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் பூஜா சிங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது பூஜா சிங்கின் உடலில் அவரின் கண்கள் காணாமல் போயிருந்துளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் மாவட்ட நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். பின்னர் இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலாக்காயில், 3 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ததில், அந்த சடலத்தில் இரண்டு கண்களும் இல்லை என்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து முதல் கட்ட பிரேத பரிசோதனை செய்த முகமது ஆரிப், முகமது உவைஸ் ஆகிய மருத்துவர்கள் புதன்கிழமையன்று சிறையிலடைக்கப்பட்டனர். உடலுறுப்பு வியாபாரம் செய்ததாக அவர்கள் மீது புகார் எழுந்ததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.