இந்தியா

மிசோரம் தேர்தலில் ஒரு முறைகூட பிரச்சாரம் செய்யாத பிரதமர் மோடி : ஓரங்கட்டப்பட்ட பா.ஜ.க - தோல்வி உறுதி!

மிசோரம் மாநிலத்தில் ஒரு முறைகூட பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்யாதது பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிசோரம் தேர்தலில் ஒரு முறைகூட 
பிரச்சாரம் செய்யாத பிரதமர் மோடி : ஓரங்கட்டப்பட்ட பா.ஜ.க - தோல்வி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்தும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த 5 மாநில தேர்தல் முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, எந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் நடைபெற்றாலும் கண்டிப்பாகச் சிறப்புத் திட்டங்களை அறிவித்து பிரச்சாரத்திற்குச் சென்று விடுவார்.

அவர் தேர்தல் பிரச்சாரத்தைப் புறக்கணிக்காத மாநிலங்களே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது மிசோரம் மாநிலத்தில் நேரில் சென்று பிரச்சாரம் செய்வதைப் பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். பா.ஜ.க கூட்டணியில் உள்ள மிசோ தேசிய முன்னணி தலைவரும், மிசோரம் மாநில முதல்வருமான சோரம் தங்கா மணிப்பூர் கலவரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இணைய மாட்டேன் என அறிவித்ததே பிரதமர் மோடி மிசோரம் மாநிலத்திற்குச் செல்லாதது காரணமாக இருந்துள்ளது.

மிசோரம் தேர்தலில் ஒரு முறைகூட 
பிரச்சாரம் செய்யாத பிரதமர் மோடி : ஓரங்கட்டப்பட்ட பா.ஜ.க - தோல்வி உறுதி!

மேலும் மிசோரம் மாநிலத்தில் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் “லோக் போல்” நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவில், சோ தேசிய முன்னணி 12 முதல் 14 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 முதல் 14 இடங்களையும், ஜோரம் மக்கள் இயக்கம் 10 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் பா.ஜ.க ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியிலிருந்தாலும் ஆளும் மிசோ தேசிய முன்னணி பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளது. இதனால் மிசோ தேசிய முன்னணி காங்கிரசுடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது. இதனால் மிசோரம் மாநிலத்திலிருந்து முற்றிலுமான பா.ஜ.க அகற்றப்படும் சூழ்நிலையே தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories