India

#LIVE | ஒடிசா ரயில் கோர விபத்து : தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

ஒடிசா ரயில் விபத்தின் சமீபத்திய தகவல்களின் விவரம் பின்வருமாறு

#LIVE | ஒடிசா ரயில் கோர விபத்து : தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on
4 June 2023, 05:10 AM

ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்!

ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்ற தொழில்நுட்பக் கோளாறே காரணம் என ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 2வது நாளாக ஆய்வு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

3 June 2023, 08:16 AM

101 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 101 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். 31 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. பயணிகளின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னையிலிருந்து இன்றிரவு சிறப்பு ரயில் புறப்படும் என காவல்துறை ரயில்வே எஸ்.பி.பொன்ராம் கூறியுள்ளார்.

3 June 2023, 06:56 AM

பயணிகளின் உறவினர்களுக்காக சிறப்பு ரயில் 

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா மாநிலம் செல்ல இன்றிரவு 7.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என ரயில்வே காவல்துறை எஸ்.பி அறிவிப்பு

3 June 2023, 06:34 AM

ஒடிசா சென்றடைந்தது தமிழக அரசின் குழு !

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாடு பயணிகளுக்கு உதவுவதற்காக புறப்பட்ட தமிழக அரசின் குழு  ஒடிசா சென்றடைந்தது

3 June 2023, 06:14 AM

288 பயணிகள் உயிரிழப்பு :

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பயணிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

3 June 2023, 06:14 AM

பயணிகளை மீட்கும் பணி நிறைவு :

ஒரிசா ரயில் விபத்தில் பயணிகளை மீட்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மீட்புப்படையினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறும் என கருதப்படுகிறது

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் :

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் -பேரிடர் மீட்புக் குழுவினர் தகவல்

banner

Related Stories

Related Stories