இந்தியா

CBI நீதிமன்றத்தில் மனிஷ் சிசோடியாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்ற டெல்லி போலிஸ்: ஆம் ஆத்மி கண்டனம்!

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CBI நீதிமன்றத்தில் மனிஷ் சிசோடியாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்ற டெல்லி போலிஸ்: ஆம் ஆத்மி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தாங்கள் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கவிழ்த்து அங்கு ஆட்சியைப் பிடிக்க பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. சமீபத்தில் கூட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த சிவ சேனா ஆட்சியைக் கழித்தது. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தது.

இப்படி, தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அப்படிதான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கழித்து விட வேண்டும் என தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வருகிறது.

CBI நீதிமன்றத்தில் மனிஷ் சிசோடியாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்ற டெல்லி போலிஸ்: ஆம் ஆத்மி கண்டனம்!
CBI நீதிமன்றத்தில் மனிஷ் சிசோடியாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்ற டெல்லி போலிஸ்: ஆம் ஆத்மி கண்டனம்!

அதன் ஒரு பகுதியாகத்தான் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியாவுக்கு பல்வேறு ஆசைகள் காட்டியும் அவர் எதற்கும் படிந்து வராததால் ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி சி.பி.ஐ கொண்டு கைது செய்துள்ளது ஒன்றிய அரசு.

இந்த கைது நடவடிக்கைக்கு அனைத்து எதிர்கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். குறிப்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்" என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற விசாரணை காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் டெல்லியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மனிஷ் சிசோடியா அழைத்துவரப்பட்டார். அப்போது, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் மனிஷ் சிசேடியா பேச முற்பட்டபோது, பாதுகாப்புப் பணிக்காக வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவரின் கழுத்தைப் பிடித்து அங்கிருந்து இழுத்துக் கொண்டு நீதிமன்ற அறைக்குள் சென்றார்.

இதையடுத்து போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மனிஷ் சிசேடியாவை இப்படி நடத்த வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டது யார்? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசேடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1ம் தேதி வரை நீடித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories