வெளிநாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு பொருட்களும் கடத்தல் காரர்கள் கடத்தி வருகின்றனர். சட்டத்துக்கு எதிராக இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வும். அயன் படத்தில் சூர்யா செய்வது போன்று வித்தியாசமான முறையில் பலவற்றை கடத்துகிறார்கள்.
இது வெறும் தங்கம் உள்ளிட்ட பொருட்களோடு முடியாமல், அரியவகை விலங்குகள், உயிரினங்கள், திமிங்கலத்தின் வாந்தி (Ambergris), போதை பொருட்கள், ஊசி என பலவற்றை கடத்துகிறார்கள். இதனை தடுக்கதான் பல நாடுகளிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விமானம் மூலம் கடத்தப்படும் இந்த பொருட்களை எல்லாம் சுங்க அதிகாரிகள் பிடிப்பர்.
பொதுவாக விமான பயணிகளை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் சோதனை செய்வர். அதில் நாம் வாங்கி வரும் உயர்ந்த விலையுல்ல பொருட்களுக்கான முறையான ரசீதை காண்பித்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் அதற்காக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் பல பொருட்கள் இந்திய விமான அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதும் ஒருவர் பிடிபட்டுள்ளார். ஆனால் அவர் கடத்தி வந்த விதம்தான் பெரிய கில்லாடியாக இருப்பார் என்று தோன்றவைத்துளளது. அண்மையில் கூட தங்கத்தை உருக்கி உருண்டையாக செய்து ஒரு கும்பல் கடத்தியதை அதிகாரிகள் பிடித்தனர். தற்போதும் அதே போல் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டபோது, சுமார் 453 கிராம் தங்க ஸ்குரூக்களை கைப்பற்றியுள்ளனர்.
துபாயில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் ஒரு பயணி தான் கொண்டு வந்த டிராலி பேக்கை சோதனை மிஷினுக்குள் செலுத்தினர். அதில் சந்தேகம் படும்படியாக ஏதோ இருந்ததால் அதிகாரிகள் அதில் இருக்கும் பொருட்களை அகற்றி உள்ளே பார்த்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லாதால் மீண்டும் தொடர்ந்து சோதனையிட்டனர். அப்போது டிராலியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்க்ரூ வித்தியாசமாக இருந்துள்ளது. இதையடுத்து அதனை கழற்றி பார்த்து சோதனை செய்தனர். அப்ப்டோது அது தங்கம் என்று தெரியவந்தது. தொடர்ந்து டிராலி பேக்கை முழுவதும் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த ஸ்க்ரூக்களையும் அதிகாரிகள் அகற்றினர்.
அவ்வாறு முழுமையாக ஸ்க்ரூக்களை அகற்றியபோதுதான் தெரிந்தது அது முழுவதும் தங்கம் என்று. அதாவது தங்கத்தை உருக்கி, அதனை டிராலி பேக்குக்கு ஸ்க்ரூவாக பொருத்தப்பட்டு துபாயில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளார் அந்த நபர். அதனை சோதனை செய்ததில் சுமார் சுமார் 453 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அதனை கடத்தி வந்த நபரையும், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.