இந்தியா

அரியவகை நோயால் 15 ஆண்டுகளாக தவித்த ஈராக் சிறுவன்.. களத்தில் இறங்கி சாதித்த இந்திய மருத்துவர்கள் !

15 ஆண்டுககாலமாக அரியவகை கால் எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட ஈராக் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து சரி செய்து இந்திய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அரியவகை நோயால்  15 ஆண்டுகளாக தவித்த ஈராக் சிறுவன்.. களத்தில் இறங்கி சாதித்த இந்திய மருத்துவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவ சிகிச்சைக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கூட இந்தியாவில் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு மற்ற நாடுகளை விட அறுவை சிகிச்சைக்கு குறைவான செலவே ஆகிறது. அதனால் பலரும் இங்கு வந்து சிகிச்சை பெருகின்றனர்.

அந்த வகையில் ஈராக் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கு இரு கால்களிலும் நான்கு எலும்புகளின் வளர்ச்சி குறைபாடுடன் இருந்துள்ளது. இதற்காக அவரது குடும்பம் சிறுவனை இந்தியா அழைத்துவந்தனர். அப்போது டெல்லியில் இருக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்களை அங்கியுள்ளனர்.

அரியவகை நோயால்  15 ஆண்டுகளாக தவித்த ஈராக் சிறுவன்.. களத்தில் இறங்கி சாதித்த இந்திய மருத்துவர்கள் !

அவர்கள் சிறுவனக்கு 3-டி பிரின்டிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் பாதிப்பின் அளவை துல்லியமாக கண்டறிந்துள்ளனர். அப்போது சிறுவனின் கால்களின் எழும்புகள் தவறான வடிவத்தை அடைந்துள்ளது தெரியவந்தது. பின்னர் சிறுவனின் இருகால்களிலும் உள்ள மூன்று எலும்புகள் மோசமாக வளைந்து வடிவம் மாறிய நிலையில், அவற்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி அதை நேர்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து பாதிப்பு குறைவாக உள்ள ஒரு எலும்பு பகுதியையும் சரி செய்தனர். இரு கட்டங்களாக இந்த அறுவை சிகிச்சையை 5 நாட்களில் மருத்துவர்கள் செய்து அசதியுள்ளனர். தற்போது அந்த சிறுவன் குணமடைந்து வருவதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் எலும்புகள் வலுவடைந்து சிறப்பாக வேலை செய்யும் என்றும், நடக்கவும் உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரப்பி பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரியவகை நோயால்  15 ஆண்டுகளாக தவித்த ஈராக் சிறுவன்.. களத்தில் இறங்கி சாதித்த இந்திய மருத்துவர்கள் !

முன்னதாக ஈராக் நாட்டிலேயே இந்த சிறுவனுக்கு மருந்துகள் கொடுத்து ஹார்மோன் வளர்ச்சி மூலம் நடக்க வைக்க பார்த்துள்ளனர். ஆனால் அவரது எலும்புகள் மோசமான பாதிப்பை கண்டதால் அங்கு மருத்துவர்களால் சரிசெய்ய முடியவில்லை. ஆனால், டெல்லி மருத்துவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நோய் தீவிரத்தை கண்டறிந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories