ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ-ஐ ஒன்றிய அரசு நீக்கி தங்கள் மாநிலத்திலேயே சுதந்திராக வெளியே வரமுடியாமல், கைதிகளைபோல் அம்மாநில மக்களை நடத்தி வருகிறது.
மேலும், அங்கிருக்கும் அரசியல் கட்சி தலைவர்களையும் அடிக்கடி வீட்டு சிறையில் வைத்து வருகிறது. இப்படி ஒன்றிய அரசு தனது அதிகாரித்தை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுதந்திரத்தை பறித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஒன்றுக்காக கல்லூரி மாணவரை தற்போது ஜாம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் அலா பசில். இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். அப்துல் கடந்த 2011ம் ஆண்டு தி காஷ்மீர் வாலா என்ற இணைய ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நிலையில், அவர் எழுதிய அந்த கட்டுரை, இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, 10 ஆண்டுகள் கழித்து தற்போது அப்துல் அலா பசிலை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரது வீட்டிலும், ராஜ்பாகில் உள்ள தி காஷ்மீர் வாலா இணைய ஊடக அலுவலகத்திலும் சோதனை செய்துள்ளனர். அதேபோல் இணைய ஊடகத்தின் ஆசிரியர் மீதும் UAPA மற்றும் IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.