இந்தியா

காணாமல் போன மகள்.. 22 ஆண்டுகள் கழித்துச் சந்தித்த தாய் : நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

காணாமல் போன தனது மகளை 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காணாமல் போன மகள்.. 22 ஆண்டுகள் கழித்துச் சந்தித்த தாய் : நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், மூடிகெரே பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள காபி எஸ்டேட் ஒன்றில் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அஞ்சலி 5 வயதாகும் போது முன்பு காணவில்லை. பல இடங்களில் தேடியும் சித்ராவால் தனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சத்ராவின் கணவர் காளிமுத்துவும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சித்ரா தனியாக வாழ்ந்து வருகிறார். அதேபோல் அஞ்சலியும் தனது தாயைத் தேடி வந்துள்ளார். இந்நிலையில் சமூக ஆர்வலர் மோனு என்பவரை அஞ்சலி சந்தித்துள்ளார். அப்போது அவரிடம், "பள்ளிக்குச் செல்ல பயந்து வீட்டை விட்டு வெளியேறி கேரளாவிற்கு வந்துவிட்டேன். தனது தாயைத் தேடிவருகிறேன்" என கூறியுள்ளார்.

இதையடுத்து சித்ராவும் மகளைத் தேடுவதை அறிந்து மோனு அவரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்துள்ளார். பின்னர் தாய் பேசும் வீடியோ அஞ்சலிக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிவைத்தார். இதைப்பார்த்த அஞ்சலி இது தனது தாய்தான் என்பதை உறுதி செய்த உடன் அவர் மூடிகெரேவுக்கு வந்தார்.

காணாமல் போன மகள்.. 22 ஆண்டுகள் கழித்துச் சந்தித்த தாய் : நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

22 ஆண்டுகள் கழித்து தனது தாயை பார்த்தவுடன் அஞ்சலி சித்ராவைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து தனது மகளுக்குத் திருமணம் ஆகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பதை அறிந்து சித்ராவும் மகிழ்ச்சியடைந்தார்.

"22 ஆண்டுகளாக பெற்றோரைத் தொலைத்துவிட்டு அநாதையாக இருந்தேன். தற்போது எனது தாய் கிடைத்துவிட்டார்கள். இனி இவர்களுடன் வாழ விரும்புகிறேன்" என ஆனந்தத்துடன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories