மகாராஷ்டிரா மாநிலம், மத்திய மும்பையின் குரோ சாலையில் 'ஒன் அவிக்னா பார்' என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 60 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தின் 19வது மாடியில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மாட்டிக் கொண்ட ஒருவர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கட்டிடத்தின் வெளியே இருந்த பால்கனியை பிடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் 19 மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இவர் மாடியிலிருந்து விழும் அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மாடியிலிருந்து விழுந்தவர் அருண் திவாரி என போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த தீவிபத்து குறித்தான காரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.