இந்தியா

சச்சின், அனில் அம்பானி... முறைகேடாகச் சொத்துகள் சேர்த்த 380 இந்தியர்கள் ?: புயலைக் கிளப்பும் Pandora!

இந்தியாவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களைப் பதுக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சச்சின், அனில் அம்பானி...  முறைகேடாகச் சொத்துகள் சேர்த்த 380 இந்தியர்கள் ?: புயலைக் கிளப்பும் Pandora!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் வெளிநாடுகளில் முறைகேடுகளாகச் சொத்துக்களைப் பதுக்கிவைத்துள்ளதாகச் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பண்டடோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புலனாய்வில் இந்தியாவைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்டோரின் பெயர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் உலக தலைவர்களின் பெயர்களும் இதில் உள்ளது.

குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சச்சின், அனில் அம்பானி...  முறைகேடாகச் சொத்துகள் சேர்த்த 380 இந்தியர்கள் ?: புயலைக் கிளப்பும் Pandora!

அதில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை ரகசியமாக குவித்துவைத்திருப்பதாக இந்த புலனாய்வில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்பட்டிருக்கும் இந்தியர்கள், தங்களின் சொத்துக்களைக் கணிசமான பகுதியைக் கடல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புலனாய்வில் 117 நாடுகளிலிருந்தது 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சேகரித்த தகவல்களைத் தான் தற்போது `பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2016ம் ஆண்டு பனாமா பேப்பர் என்ற பெயரில் பலரின் முறைகேடுகள் குறித்து தகவல்கள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது `பண்டோரா பேப்பர்ஸ்' வெளிவந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories