இந்தியா

"பணவீக்கம் 12.94% உயர்வு... இதற்காக மோடி அரசை மெச்ச வேண்டாமா?" : ப.சிதம்பரம் கிண்டல்!

மோடி அரசு எவ்வளவு திறமையாகப் பொருளாதாரத்தை வழிநடத்துகிறது என்று மெச்சவேண்டாமா? என ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

"பணவீக்கம் 12.94% உயர்வு... இதற்காக மோடி அரசை மெச்ச வேண்டாமா?" : ப.சிதம்பரம் கிண்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஏழு ஆண்டுகால ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு என நாடே கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மேலும் கொரோனாவின் பிடியிலும் சிக்கியுள்ளது.

இந்நிலையில், தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வு மற்றொரு பக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனைதான். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை என ஒன்றிய அரசு அலட்சியமாகப் பதில் சொல்கிறது.

இந்நிலையில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் 12.94% மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த பணவீக்கத்தால் மேலும் அதிரடியாக விலை உயரும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களாகவே தொடர்ந்து மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரலில் 10.49 சதவீதமாக, இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்தது. தற்போது மே மாதத்தில் 12.94 சதவீதமாக மேலும் உயர்ந்துள்ளது.

இந்த மொத்த விலை பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்ததே என ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,பிரதமர் மோடி அவர்களின் அரசு எவ்வளவு திறமையாகப் பொருளாதாரத்தை வழிநடத்துகிறது என்று மெச்ச வேண்டாமா? என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில், “பணவீக்கம், அதாவது விலை உயர்வு, எவ்வளவு தெரியுமா? மொத்த விலை உயர்வு 12.94 %, சில்லறை விலை உயர்வு 6.3%. என்ன காரணம் தெரியுமா? எரி பொருள் (பெட்ரோல், டீசல்) மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் 37.61% உயர்ந்துள்ளன.

உணவுப் பொருள்கள் விலை உயர்வு 6.3%, பருப்பு வகைகள் விலை உயர்வு 9.39%, சமையல் எண்ணெய் விலை உயர்வு 30%. பிரதமர் மோடி அவர்களின் அரசு எவ்வளவு திறமையாகப் பொருளாதாரத்தை வழிநடத்துகிறது என்று மெச்ச வேண்டாமா?" எனப் பதிவிட்டு ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories