இந்தியா

“2022ம் ஆண்டில்தான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும்” : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பேச்சு!

கொரோனா தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

“2022ம் ஆண்டில்தான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும்” : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் மும்பரமாக ஈடுபட்டு வரும் வேலையில், 2022ம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்கவேண்டும். தடுப்பூசி போடுவதால் மட்டும் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிடாது. போதுமான சிரிஞ்சுகள், போதுமான ஊசிகள் வைத்திருப்பது மற்றும் நாட்டின் தொலைதூர பகுதிக்கு தடையின்றி அதை வழங்குவது மிகப்பெரிய சவாலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories