மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தும் பிரதமர் மோடி மீதும், மத்திய பாஜக அரசு மீதும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாகப் பொருளாதார சரிவு, கொரோனா பரவலைத் தடுப்பதில் தோல்வி, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை தொடர்பாகச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் வருகிறார்.
அவ்வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 92,000 கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இந்நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில் இன்னும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பேர் மேலும் பாதிக்கப்படுவதுடன் மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை அடையும் அளவுக்கு நிலை உருவாகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசின் திட்டமிடப்படாத திடீர் ஊரடங்கு உத்தரவும் பிரதமர் மோடியின் தனிமனித ஈகோவும் நாடு முழுவதும் கொரோனா பரவுவதற்கு வித்திட்டுள்ளது.
மேலும், பாஜக அரசின் நடவடிக்கையினால் இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், தன்னம்பிக்கை கொண்டர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தமாக பிரதமர் மோடி மயில்களுடன் தனது நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்பதால் நாட்டு மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதாகும்” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.