இந்தியா

அமேசானுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் இன்னொரு நிறுவனம்!

உணவு டெலிவரி துறையில் பிரபல ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டும் கால்பதிக்கவுள்ளது.

அமேசானுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் இன்னொரு நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைன் பயன்பாடு இல்லாத நாடு என்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. போட்டிகள் உருவானதால் புதுப்புது நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் சலுகைகளை அள்ளிக்கொடுத்து இலவச டெலிவரியும் செய்து வருகின்றனர். அதிலும் உணவு சார்ந்த டெலிவரிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் அமேசான் நிறுவனம் இதில் முன்னணியில் உள்ளது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. எலக்ட்ரானிக்ஸ் மட்டும் வீட்டு உபயோகப் பொருட்களை மட்டுமே விற்று டெலிவரி செய்து வரும் அமேசான் உணவுத்துறையிலும் கால்பதித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் வருகிற டிசம்பர் முதல் அமேசான் ஃபுட் டெலிவரி சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமேசான் ப்ரைம் வீடியோ சேவையும் இங்கு பிரபலம்.

அமேசானுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் இன்னொரு நிறுவனம்!

தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் உணவுச்சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதற்காக வால்மார்ட் நிறுவனம் ரூ.2,500 கோடியை ஒதுக்கி Farmer Mart என்ற பிரத்யேக நிறுவனத்தையும் நிறுவியுள்ளது. இதில், காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை டெலிவரி செய்யப்படவுள்ளன.

இந்த சேவை மட்டுமல்லாமல், வெப் சீரிஸிலும் கால்பதிக்கவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ரியாலிட்டி ஷோக்கள், சீரிஸ்களை சொந்தமாக தயாரித்து ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதனடிப்படையில் பாலிவுட் நடிகை, நடன இயக்குநர், சினிமா இயக்குநர் என பல்வேறு துறைகளில் கோலோச்சியுள்ள ஃபரா கான் ஃப்ளிப்கார்ட்டின் சீரிஸ் ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

இதில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாலிவுட் நடிகை பர்னிதி சோப்ரா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி அக்.,19ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories