இந்தியா

“மதச்சார்பின்மையால் இந்திய கலாச்சாரம் சந்தித்த சவால்?” - யு.பி.எஸ்.சி தேர்வு கேள்வியால் சர்ச்சை!

சமீபத்தில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் மதச்சார்பின்மை குறித்து கேட்கப்பட்ட கேள்வி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மதச்சார்பின்மையால் இந்திய கலாச்சாரம் சந்தித்த சவால்?” - யு.பி.எஸ்.சி தேர்வு கேள்வியால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய குடிமையியல் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்தஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெற்றது.

“மதச்சார்பின்மையால் இந்திய கலாச்சாரம் சந்தித்த சவால்?” - யு.பி.எஸ்.சி தேர்வு கேள்வியால் சர்ச்சை!

இந்தத் தேர்வில் மதச்சார்பின்மை குறித்து கேட்கப்பட்ட கேள்வி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “மதச்சார்பின்மையினால் நமது கலாச்சார நடைமுறைகளுக்கு என்னென்ன சவால்கள் ஏற்பட்டுள்ளது'' என கேட்கப்பட்டுள்ளது.

இந்தக் கேள்வி மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசும் விதமாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அவ்வாறு இருக்கையில், மதச்சார்பின்மை எப்படி சவாலாக இருக்கும் என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்னதாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தலித்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories