இந்தியா

யார் எப்போது ட்விட்டரில் உதவி கேட்டாலும் ஓடி வந்து உதவுபவர் சுஷ்மா - இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்

பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு பல மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் எப்போது ட்விட்டரில் உதவி கேட்டாலும் ஓடி வந்து உதவுபவர் சுஷ்மா - இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

1953ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பிறந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். சட்டம் படித்த இவர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றினார்.

அவரின் அரசியல் செயல்பாடுகளினால் தனது 25 வயதில் ஹரியானா மாநிலத்தில் அமைச்சரானார். அதன் பின்பு ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1998ம் ஆண்டு 3 மாதங்கள் டெல்லியின் முதல்வராக பொறுப்பெற்றார்.

இறுதியாக 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு விதிஷா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினாராக வெற்றி பெற்றார். அப்போது அமைக்கப்பட்ட பா.ஜ.க அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சரானார். சுதந்திர இந்தியாவில் இரண்டு பெண் அமைச்சர்கள் மட்டுமே வெளியுறவுத் துறை பொறுப்பு வகித்தார்கள். அதில் ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் தான்.

இவர் 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வெளியுறவுத் துறையில் அமைச்சராக இருந்த பொது, வெளிநாடுகளில் எதாவது பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் இந்தியர்களை மீட்க தன்னுடைய முழு முயற்சியையும் செலுத்தி பாதிப்புக்குள்ளான இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளார். இவரின் செயல்பாடுகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளில் பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சைப் பெற உடனடியாக விசா வழங்க நடவடிக்கை எடுத்தார். அதேபோல் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக்கொண்ட இந்தியர்கள் பலரை மீட்க இவர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

பெரும்பாலும் ட்விட்டரில் யாரேனும் உதவிகேட்டு பதிவிட்டுருந்தால், அந்த பதிவுக்கு உடனே பதில் அளிப்பார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க முயற்சியில் இறங்குவார். அப்படி இந்தியாவைச் சேர்ந்த உஸ்மா என்ற பெண், தான் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவதாக அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் முறையிட்டார்.

யார் எப்போது ட்விட்டரில் உதவி கேட்டாலும் ஓடி வந்து உதவுபவர் சுஷ்மா - இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்

இதையடுத்து, அவரை மீட்கும் விதமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'இந்தியாவின் மகளே உன்னை எடுக்கிறேன்' என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்காக சுஷ்மா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியா வந்த உஸ்மா, சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாஸ்போர்ட்டுகளை இழந்திருந்தவர்கள் கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்ததிய போது மாணவர்கள் பயப்படவேண்டாம். இந்த சூழ்நிலையை நானே தனிப்பட்ட முறையில் சரி செய்கிறேன் என ட்விட்டரில் கூறி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

அதேபோல் அவர்களுக்கு உதவவும் நடவடிக்கைகள் எடுத்தார். யார் எப்போது ட்விட்டரில் இவரது பெயரை குறிப்பிட்டு உதவி கேட்டாலும், அவர்களுக்கு உதவும் விதமாக அவர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர்ந்து இன்று பலரும் இரங்கல் செய்தி பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories