இந்தியா

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 கமாண்டோ படை வீரர்கள் பலி

மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 கமாண்டோ படை படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமட்டம் நிறைந்த பகுதி. கடந்த ஆண்டு ஏப்.,22 அன்று பாதுகாப்பு படை வீரர்களால் சுமார்40 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மாவோயிஸ்டுகளை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஏப்.,11 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்த கட்சிரோலியில் 150 மீட்டருக்கு தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.

இந்நிலையில், கட்சிரோலி பகுதியில் சி-60 கமாண்டோ படை வீரர்கள் வாகனத்தில் சென்ற போது அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வேனில் சென்ற 15 பாதுகாப்பு படை வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

banner

Related Stories

Related Stories