தி.மு.க

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : கோவை மாநகராட்சியைக் கண்டித்து காலி குடங்களோடு கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜூலை 29ம் தேதியன்று அவரவர் இல்லத்தின் முன்பு, கறுப்புக் கொடி ஏற்றி, காலிக் குடங்களோடு, கோவை மாநகராட்சியைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : கோவை மாநகராட்சியைக் கண்டித்து காலி குடங்களோடு கண்டன ஆர்ப்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜூலை 29ம் தேதியன்று (புதன்கிழமை) தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, அவரவர் இல்லத்தின் முன்பு, கறுப்புக் கொடி ஏற்றி, காலிக் குடங்களோடு, கோவை மாநகராட்சியைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.

இன்று, 22.07.2020 புதன்கிழமை, காலை 11.00 மணியளவில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகக் குழுக்கூட்டம், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மெட்டல் டி.எஸ்.பி.கண்ணப்பன் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, ச. குப்புசாமி, அ.நந்தகுமார், மெட்டல் மணி , இரா.க.குமரேசன் , உமாமகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், சி.வி.தீபா, சி.டி.டி ராஜராஜேஸ்வரி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ் , பகுதிக் கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, ஆர்.எம்.சேதுராமன், மார்கெட் எம்.மனோகரன், வ.ம. சண்முகசுந்தரம், வி.பி.செல்வராஜ், குனியமுத்தூர் லோகு, கே.எம்.ரவி, மா. நாகராஜ் , ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் :

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு 15 நாட்கள், சில இடங்களில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறைதான் மிகவும் குறைந்த அழுத்தத்துடன் , சன்னமாக, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகிக்கும் அவலம் ஏற்பட்டு, வரலாறு காணாத வகையில் கடுமையான குடிநீர் பஞ்சம் அதிகரித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் நாளுக்கு நாள், மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோக அளவை நாளுக்கு நாள் குறைத்து வருவது மக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களுடைய வாழ்வாதாரமாக, உயிர் நாடியாகத் திகழக்கூடிய குடிநீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : கோவை மாநகராட்சியைக் கண்டித்து காலி குடங்களோடு கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்த குடிநீர் விநியோகம் பிரச்சினை தொடர்பாக, கோவை மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர் ஆகியோரை 11.1.2019, 21.1.2019, 4.2.2019, 28.5.2019, 10.6.2019, 24.6.2019, 13.8.2019, 22.10.2019, 12.11.2019, 03.01.2020, 11.01.2020 ஆகிய தேதிகளில், உடன் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு, நேரில் சென்று சந்தித்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் குடிநீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை. தற்பொழுதும் தொடர்ந்து மாநகராட்சியின் ஆணையாலர், துணை ஆணையாளர், மண்டல உதவி ஆணையாளர், உதவி பொறியாளர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு வலியுறுத்தியும், குடிநீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை.

கோவை மாநகராட்சியில் குடிநீர் நிர்வாக மேலாண்மையில் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே ,பொதுமக்களின் நலன் கருதி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட, மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள், நகர் நல சங்க நிர்வாகிகள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் , வருகின்ற 29.7.2020 (புதன்கிழமை) அன்று, காலை 10 மணிக்கு, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, அவரவர் இல்லத்தின் முன்பு, கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, காலிக் குடங்களோடு, கோவை மாநகராட்சியைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

banner

Related Stories

Related Stories