சினிமா

ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த அக்கா, அண்ணன்: சோகத்தில் பிரபல நடிகர் மற்றும் குடும்பத்தினர்!

ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த அக்கா, அண்ணன்: சோகத்தில் பிரபல நடிகர் மற்றும் குடும்பத்தினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். இந்த தொடர் அவருக்கு சினிமாவில் நுழைவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

இதையடுத்து தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்குடிய குணச்சித்திர நடிகர்களில் இவரும் ஒருவராக உள்ளார். தனது எதார்த்தமான நடிப்பால் எந்தவிதமான கதாபாத்திரத்திற்கும் பொருந்துகிறார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த அக்கா, அண்ணன்: சோகத்தில் பிரபல நடிகர் மற்றும் குடும்பத்தினர்!

மேலும் இவர் நடிகராக அப்படியே நின்றுவிடாமல் 2020ம் ஆண்டு கன்னிமாடம் என்ற படத்கை இயக்கி இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் அறந்தாங்கியில் இருந்து வந்துள்ளார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த அக்கா, அண்ணன்: சோகத்தில் பிரபல நடிகர் மற்றும் குடும்பத்தினர்!

தனது சகோதரி உடலைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories