சினிமா

கைவிட்ட உறவினர்கள்.. மருத்துவமனை மார்ச்சுவரியில் அனாதையாக கிடக்கும் மலையாள நடிகரின் சடலம்!

மலையாள சினிமாவின் பழம்பெரும் நடிகர் ராஜ்மோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கைவிட்ட உறவினர்கள்..  மருத்துவமனை மார்ச்சுவரியில் அனாதையாக கிடக்கும் மலையாள நடிகரின் சடலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர் 1967ல் வெளியான 'இந்துலேகா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அந்த காலத்தில் வெளியான சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

பின்னர் வயது முதிர்வு ஏற்பட்டதை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மேலும் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிவந்தார்.

கைவிட்ட உறவினர்கள்..  மருத்துவமனை மார்ச்சுவரியில் அனாதையாக கிடக்கும் மலையாள நடிகரின் சடலம்!

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

கைவிட்ட உறவினர்கள்..  மருத்துவமனை மார்ச்சுவரியில் அனாதையாக கிடக்கும் மலையாள நடிகரின் சடலம்!

இதையடுத்து இவரது மரணம் குறித்து உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்மோகன் உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள கலாச்சாரத்துறை அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் உடலை அரசு சார்பில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories