உலகம்

10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு : அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் அறிவித்தது என்ன ?

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.

அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக குடியரசுக் கட்சி வேட்பாளராக துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்து. இதில் 300க்கும் அதிகமான எலெக்டரோல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும், பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்கராக இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழலில் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் வசித்து குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள 10 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வேலைக்காக சென்றுள்ள பல லட்சம் இந்தியர்கள் அங்கு குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராக சீமான் இருப்பது வருத்தமளிக்கிறது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !