உலகம்
மீண்டும் வெடிக்கும் சீக்கியர்கள் விவகாரம்: அமித் ஷா மீது கனடா அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு -பின்னணி என்ன?
இந்தியாவில் ஒருகாலத்தில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை பெரிய அளவில் எழுந்த நிலையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் நடவடிக்கை காரணமாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் காலிஸ்தான் கோரிக்கை முடிவுக்கு வந்தாலும், இந்தியாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வாழும் கனடாவில் அந்த கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
சீக்கியர்கள், கனடா நாட்டு மக்கள் தொகையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களின் இந்த கோரிக்கையால் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. இந்த சூழலில் கடந்த 2023, ஜூன் மாதம் காலிஸ்தான் கோரிக்கை குறித்து போராட்டங்களை நடத்தி வந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கனடா அரசு, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு இருக்கலாம் என சந்தேகித்ததோடு, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டி, அந்நாட்டுக்கான இந்திய தூதர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று அறிவித்தது.
இதுகுறித்த குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை இந்தியா - கனடா இடையே பிரச்னை நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் அமெரிக்க நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது. அதைதான் கனட அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கிறார். கனடா நாட்டின் பிரமுகர் இப்படி கூறியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த பகீர் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்றும், இந்த விவகாரம் தொடர்பாக கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா இந்த விவகாரத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றும் என்று அந்த சாமானில் குறிப்பிட்டுள்ளதாகவும், கனடா அரசின் இந்த பொறுப்பற்ற உக்தி இரு நாடுகளின் உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே உதவும். இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் தற்போது மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!