உலகம்
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. ஆனால் அங்கு உக்ரைன் ராணுவம் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வந்தது.
இந்த நிலையில் உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகரமாக Selydove நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தப் போரின் முக்கிய திருப்பு முனையாக கருதப்படுகிறது.
Selydove நகர் ரஷ்யாவின் பிடியில் விழுந்துள்ள நிலையில், உக்ரைன் ராணுவ தளவாட மையமான Pokrovsk நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேலை Selydove நகரமும் ரஷ்யா பிடியில் விழுந்தால் அது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஒரு செங்குத்து பிளவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!