உலகம்

ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !

வங்கதேச நாட்டின் பிரதமராக அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷைக் ஹசினா 2009 -ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றார். அதன்பின்னர் தோல்வியே தழுவாமல் தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக இருந்து வந்தார்.

ஆனால், வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட வழக்கு ஒன்று வங்கதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை கைதுசெய்து, வரும் நவம்பர் 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரத்தால் அங்கிருந்து தப்பிய ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also Read: "அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !