உலகம்
சீனாவுக்கு மட்டும் சலுகையா ? அதை நிறுத்துனாதான் காசு... பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்த IMF !
கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை
பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக உலகவங்கி, ஐஎம்எப் ஆகிய நிறுவனங்களிடம் கையேந்தியது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் 7 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் முதலீடு செய்யும் நாடுகளுக்கு வரி சலுகை உள்ளிட்ட சிறப்பு உதவிகளை வழங்க கூடாது என ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்துள்ளது. பாகிஸ்தான் சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதற்காக பாகிஸ்தானில் தொழில்களை மேற்கொள்ள பல்வேறு சலுகைகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை குறிவைத்தே ஐஎம்எப் பாகிஸ்தானுக்குஇத்தகைய நிபந்தனை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே நேரம் ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து நாடுகளும் முதலீடு செய்வதற்கு ஒரு சமமான வாய்ப்பு உருவாக்கும் விதமாகவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்தால் ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!