உலகம்

ஜப்பானிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

அணுகுண்டு தாக்குதலால் உண்டாகும் தாக்கம் என்னவென்று உலகிற்கு தெரியப்படுத்திய நாடாக ஜப்பான் அமைந்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பானின் இரோசிமா, நாகாசாகி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தியதால், ஏற்பட்ட இறப்புகள் இலட்சங்களை கடந்தது ஒரு வகையான தாக்கம் என்றால், அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர்தப்பியவர்களின் தலைமுறைகளும் உடல் சார்ந்த தாக்கத்தை சந்தித்து வருவது மற்றொரு வகையான தாக்கம்.

இதுபோன்ற கொடுமையான தாக்கங்கள், இனி உலகில் நிகழக்கூடாது என பல்வேறு அமைப்புகள் முயற்சித்து வந்தாலும், இன்றளவும் பல நாடுகள் அணு ஆயுதங்களை ஆதரிக்கின்றனர்.

இந்நிலையில், அணுகுண்டு தாக்குதலை நன்குணர்ந்த ஜப்பானின் இரோசிமா, நாகாசாகி நகரங்களைச் சேர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட, அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கிற, நிஹான் ஹிடாங்கியோ அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்கான நோக்கம், உலக அளவில் அணு ஆயுத பயன்பாட்டை குறைக்க முன்னெடுக்கப்படும் முயற்சி தான் என நோபல் பரிசு அளிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read: ஸ்வீட் எடு.. கொண்டாடு... தீபாவளியை முன்னிட்டு Combo Offer அறிவித்த ஆவின் !