உலகம்

’Don't Worry' : வீட்டில் சமைத்து, துணி துவைத்து சென்ற வினோத திருடன் - எங்கு நடந்த சம்பவம் இது?

திருடர்கள் பல குணங்களை கொண்டு இருப்பார்கள். திருடச் செல்லும் இடத்தில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கிருந்து பணம், நகைகளை திருடிச் சொல்வார்கள்.மேலும் சிலர், பணம், நகைகளை தாண்டி தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளை எடுத்து சொல்வார்கள்.

ஆனால், இங்கிலாந்து நாட்டில் வீட்டில் திருட சென்ற இளைஞர் ஒருவர், அந்த வீட்டில், வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்து விட்டு ’Don't Worry ' என உரிமையாளருக்கு எழுதிவிட்டு சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

36 வயது கொண்ட இளைஞர் ஒருவர், வீட்டில் திருட சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் பொருட்கள் எல்லாம் அப்படி, அப்படியே கலைந்தபடி இருந்துள்ளது. அடனே திருடன் மேசையில் இருந்து காய்கறிகளை எடுத்து குளிர்சாதன பெட்டியில் அடுக்கிவைத்துள்ளார்.

மேலும், வீட்டை பெருக்கி கூட்டியுள்ளார். அதோடு அழுக்கு துணிகளை துவைத்து உலரவைத்துள்ளார். வீட்டின் உரிமையாளர்களுக்கு நல்ல உணவை சமைத்துவைத்து, ”don't worry be happy” என எழுதிவைத்துவிட்டு அத்திருடன் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் வோஜ்னிலோவிச் என்ற அந்த திருடன் பிடிபட்டுக் கொண்டுள்ளார். சிறுவயது முதலே தனக்கு தங்க வீடு இல்லாததால் திருடும் வீட்டில் இப்படி செய்து வருவதாக அந்த இளைஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

Also Read: பாய்ந்த போக்ஸோ வழக்கு... கைதான ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து - வெளியான அறிவிப்பால் சலசலப்பு!