உலகம்
இலங்கை அதிபர் தேர்தல் : ராஜபக்சேவின் மகனை புறக்கணித்த இலங்கை மக்கள் : வெளிநாடு செல்ல திட்டம் !
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதேபோல் தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு ஏற்பட்ட நிலையில் அதற்கு காரணமாக இருந்த அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் கொதித்தெழுந்தனர். மக்கள் போராட்டம் காரணமாக இருவரும் பதவி விலகி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக ரனில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். தற்போது இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் ஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் நமல் ராஜபக்சேவுக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்தால் அதன் மூலம் இலங்கை அரசியலில் மீண்டும் கால்பதிக்கலாம் என ராஜபக்சே குடும்பத்தினர் கனவு கண்ட நிலையில், நமல் ராஜபக்சேவுக்கு தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வெறும் இரண்டரை சதவீத வாக்குகளுடன் நமல் ராஜபக்சே ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இத்தனைக்கும் நமல் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை வைத்துள்ள இலங்கை பொதுசன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கை மக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
இதனிடையே நமல் ராஜபக்சேவின் மனைவி மற்றும் அவரது மாமனார் ஆகியோர் விமானநிலைத்தில் இருந்து வெளிநாடு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் நமல் ராஜபக்சேவும் விரைவில் வெளிநாட்டுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
Also Read
-
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - ஐ.நா சபையில் ஒலித்த தமிழர் குரல்... திருச்சி சிவா எம்.பி பேசியது என்ன ?
-
"பொது சிவில் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைப் பழிவாங்க கொண்டுவரப்படும் சட்டம்" - முரசொலி காட்டம் !
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!