உலகம்

டிரம்ப் , கமலா ஹாரிஸ் இருவருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள் - போப்பாண்டவரின் கருத்தால் பரபரப்பு !

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.

அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் குடியரசுக் கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு பதிலாக துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரையும் கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவர் கடுமையாக விமர்சித்துள்ளார். விமானத்தில் செல்லும்போது செய்தியாளர் ஒருவருக்கு பேட்டியளித்த போப்பாண்டவர் பிரான்ஸிஸ் அமெரிக்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், "அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் நிச்சயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதே நேரம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதும் முக்கியம். தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் இருவருமே வாழ்வுக்கு எதிரானவர்கள்தான். ஒருவர் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு எதிரானவர். இன்னொருவர் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் கொள்கை கொண்டவர்.

எனினும் நீங்கள் குறைந்த தீங்கு விளைவிப்பவருக்குவாக்களிக்க வேண்டும். யார் குறைந்த தீங்கு விளைவிப்பவர் என்று எனக்கு தெரியாது. ஆகவெ நீங்கள் மனசாட்சியுடன் சிந்தித்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்ரு கூறினார். போப்பாண்டவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திராவிட மாடல் அரசின் சாதனை... ஓராண்டை நிறைவு செய்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - மக்கள் வாழ்த்து !