உலகம்
ரஷ்ய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. புதினை கைது செய்ய மறுத்த மங்கோலியா : பின்னணி என்ன ?
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரில், ரஷ்யப் படைகள் பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளை ஐ.நா முன்வைத்திருந்தது. மேலும், உக்ரைனில் நடக்கும் போர்க் குற்றங்கள் நடப்பதாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்து .
இந்த வழக்கில் போர்க் குற்றங்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்று நீதிமன்றம் கூறிய நிலையில், குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, போர்க்குற்றம் உள்ளிட்ட முக்கிய குற்றசாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனால் புதின் வேறு எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து புதின் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முக்கியமான பிரிக்ஸ் மாநாட்டில் கூட காணொளி வாயிலாகவே பங்கேற்றார்.
இதனிடையே சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள மங்கோலியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில் அவரை மங்கோலியா கைது செய்ய வேண்டும் என மேற்கத்திய நாடுகள் மங்கோலியாவுக்கு அழுத்தம் கொடுத்தன.
ஆனால், புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்த மங்கோலியா, அவருக்கு உரிய மரியாதையை அளித்து மேற்கத்திய அழுத்தங்களை புறக்கணித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு அவரை திரும்ப அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மங்கோலியா நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!