உலகம்
ஹிஸ்புல்லா தாக்குதல் குறித்து அச்சம் : நாடு தழுவிய 48 மணிநேர அவசர நிலையை அறிவித்தது இஸ்ரேல் அரசு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா பெரிய அளவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் நாடு தழுவிய 48 மணிநேர அவசரகால நிலையை இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புதுறை சார்பில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையை உளவுத்துறை அளித்துள்ளது. இதனால் நாட்டில் 48 மணி நேர அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மக்கள் கூடும் தளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : பெரும்பான்மை பெறுவாரா அதிபர் அநுர குமார திசநாயக்கே ?
-
தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திமுக - திருச்சி சிவா MP பேச்சு !
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!
-
வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடியில் சிலை எழுப்பி 25 ஆண்டுகள் நிறைவு : கலைஞரின் செயல்களை விவரித்த முரசொலி !
-
சென்னை பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி : மாநகராட்சியின் அசத்தலான திட்டம் என்ன?