உலகம்
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் : திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த ரஷ்ய ராணுவம் : முதல்முறை நடந்த மாற்றம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. எனினும் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் படைகள் உக்ரைனின் டோனஸ்க் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் முன்னேறி வருகிறது. இதனை உக்ரைன், ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் இந்த தாக்குதல் காரணமாக அந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்களை வெளியேற்ற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் பல நகரங்களை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாகவும், குர்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுட்ஜாவையும் உக்ரைனிய படைகள் முற்றுகையிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!