உலகம்
பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் : பயணிகள் அனைவரும் (61 பேர் ) உயிரிழந்ததாக அறிவிப்பு !
பிரேசிலின் தெற்கு மாகாணமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்துக்கு வோபாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர் 72-500 விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது.
இந்த விமானத்தில் 57 பயணிகள் மற்றும் விமான குழுவினர் நான்கு பேர் என மொத்தம் 61 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் வின்ஹெடோ நகர் அருகே சென்றபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து விமானம் செங்குத்தாக கீழே விழத்தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த விமானிகள் எடுத்த முயற்சி வெற்றிபெறாத நிலையில், அந்த விமானம் தரையில் விழுந்து மோதியது. இந்த மோசமான விபத்தில் விமானத்தில் இருந்த 61 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விமானம் வின்ஹெடோ நகரின் குடியிருப்பு பகுதியில் விழுந்தாலும், அங்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு பிரேசில் அதிபர் லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதே போல இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, சாவோ பாலோ மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை உடனடியாக தொடங்கப்பட்டு, விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!