உலகம்

வங்கதேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் : காவல்துறை ஏற்படுத்திய வன்முறையில் 30ஐ கடந்த உயிர்பலி !

பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் இந்தியாவின் தலையீடு காரணமாக 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இடஒதுக்கீடு 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதனை மீண்டும் அமல்படுத்த ஆளும் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்றனர்.

இந்த மாணவர் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான அமைப்புகள் களமிறங்கிய நிலையில், இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் என்னைகை தற்போது 150ஆக அதிகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வன்முறைக்கு காரணமாக இருந்த இடஒதுக்கீடு விகிதத்தை 30ல் இருந்து 5 சதவீதமாக குறித்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதனால் போராட்டம் குறைந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வங்கதேச அரசை எதிர்த்து போராட்டக்காரர்கள் ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். தொடர்ந்து இன்று காலை சில கடைகள் திறக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் அதனை மூடுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க வங்கதேச போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தினர். இந்த வன்முறையில் சுமார் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .

Also Read: “இந்த தேர்தலில் பாஜகவின் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது...” - செல்வப்பெருந்தகை அறிக்கை !