உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து : பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக அச்சம் !

காட்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை 19 பயணிகளுடன் பொக்காரா என்ற நகருக்கு புறப்பட்டுள்ளது. விமானம் கிளம்பி ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது திடிரென விமானம் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

விமானத்தை கட்டுப்படுத்த விமானி முயற்சித்தும் அது பலன் கொடுக்காத நிலையில் ஓடுபாதையிலிருந்து சறுக்கிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் உடனடியாக தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பயணிகளால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்ட போதிலும், அதில் பயணம் செய்த பயணிகளை காக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய தகவலின் படி விமானத்தில் பயணம் செய்த 19 பயணிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

டுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தை எங்கள் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் - காங்கிரஸ் அறிவிப்பு !