உலகம்

எத்தியோப்பிய நிலச்சரிவு : 229 ஆக அதிகரித்த உயிரிழப்பு... காப்பாற்றச் சென்றவர்கள் பலியான சோகம் !

வட கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் தெற்கு பிராந்தியத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கோஃபா என்ற இடத்தில கடந்த திங்கட் கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்த நிலையில், நாடு முழுவதுமிலிருந்து மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் மண்ணில் புதைந்த 5 பேரை மட்டுமே உயிருடன் பொதுமக்கள் மற்றும் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

தினமும் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மண்ணில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. இதில் 148 பேர் ஆண்கள் மற்றும் 81 பேர் பெண்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான தகவலின்படி முதலில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க அந்த பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டு அதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டதே அதீத உயிரிழப்புக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து : பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக அச்சம் !