உலகம்
பற்றியெரியும் வங்கதேசம் : அரசுக்கு எதிராக திரண்ட மாணவர்கள்... வன்முறையில் 130 பேர் உயிரிழப்பு !
பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் இந்தியாவின் தலையீடு காரணமாக 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த இடஒதுக்கீடு 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதனை மீண்டும் அமல்படுத்த ஆளும் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாக்கா பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் பின்னர் நாடு முழுவதும் விரிவடைந்தது. இந்த மாணவர் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது.
மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான அமைப்புகள் களமிறங்கிய நிலையில், அரசுக்கு ஆதரவாக ஆளும் அவாமி லீக் கட்சியினர் களமிறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் என்னைகை தற்போது 130ஆக அதிகரித்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தில் வங்கதேசத்தில் படித்துக்கொண்டிருந்த ஏராளமான வெளிநாட்டு மாணவர்களும் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை வெளியேற்றும் பணியில் அந்தந்த நாட்டின் தூதரங்கள் தீவிரமாக இயங்கி வருகிறது. அங்குள்ள இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்களும் வெளியுறவுத் துறையால் மீட்கப்பட்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!