உலகம்

ஜெலன்ஸ்கியை புதின் என்றும், கமலா ஹாரிஸை ட்ரம்ப் என்றும் உளறி ஜோ பைடன் - சிக்கலில் அமெரிக்க அதிபர் !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில், அவர் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், கமலா ஹாரிஸை ட்ரம்ப் என்று அழைத்தும் சிக்கலில் மாட்டியுள்ளார். வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாட்டின் இறுதிநாள் கூட்டம் முடிந்த பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது உக்ரைன் அதிபர் , ஜெலன்ஸ்கி வரும்போது, அவரை புதின் என்று அழைத்தார். பின்னர் சுதாரித்த பைடன் 'அதிபர் புதினை நாங்கள் வீழ்த்தப்போகிறோம்' என்று கூறினார். தொடர்ந்து கமலா ஹாரிஸை குறிப்பிட்டு "டிரம்ப்க்கு துணை அதிபராக இருக்க தகுதி இல்லை என்றால், அவரை துணை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்" என்று கூறினார். அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆஸ்திரியாவா? ஆஸ்திரேலியாவா? - வெளிநாட்டுக்கு சென்று அந்த நாட்டின் பெயரை தவறாக சொன்ன மோடி... வீடியோ வைரல்!