உலகம்

குவைத் கேரளா தொழிலதிபர் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து... 43 இந்தியர்கள் பரிதாப பலி - பின்னணி?

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கஃப் என்ற நகரில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இங்கு இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் (அங்குள்ள நேரப்படி) கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீயானது சில மணித்துளிகளிலேயே மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். எனினும் அங்கிருந்த புகைமூட்டத்தில் ஒரு சிலர் மூச்சுத்திணறி உடல்கருகி பலியாகியுள்ளனர்.

இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 11 பேர் உள்பட 40 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தற்போது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

Also Read: “இதுபோன்ற அவமானத்தை சகிக்க கூடாது” - அமித்ஷா தமிழிசை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அறிவுறுத்தல் !