உலகம்
2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் டாடா குழுமம் : தொடரும் layoff-களால் அதிர்ச்சில் தொழிலாளர்கள் !
ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது.
இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது.சில சிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. ஐ.டி நிறுவனங்களில் தொடங்கிய இந்த வேலையிழப்பு அடுத்தடுத்து பிற துறைகளிலும் தொடர்ந்தது.
அதன் வகையில் உலகின் முன்னணி நிறுவனந்தமான டாடா குழுமம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் 8000 நபர்கள் பணி புரியும் நிலையில், சுற்றுசூழலை பாதிக்காத வகையில் புதிய முறைக்கு மாறவுள்ளதாக தெரிவித்துள்ளது. Decarbonization என அழைக்கப்படும் இந்த முறைக்கு குறைவான தொழிலாளர்களே தேவைப்படுவார்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யுள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.வி. நாரேந்திரன் கூறியுள்ளார். மேலும் தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!