உலகம்

G Pay சேவையை நிறுத்த முடிவெடுத்த கூகுள் நிறுவனம் : இந்திய பயனர்களுக்கு விதிவிலக்கு அறிவித்து அறிவிப்பு !

தற்போது டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணைய வழி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் முக்கியமானவை பரிவர்த்தனை. இந்த யுகத்தில் பணம் கூட டிஜிட்டல் வடிவில் மாற்றம் பெற்று நம் கைகளில் Google pay, Phonepe, amazon pay, என்று வளம் வருகிறது.

தற்போது யுபிஐ மூலம் நாம் இங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். மக்கள் பயன்பாட்டுக்கு கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் உள்ளிட்டவை பயன்படுத்தி மக்கள் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யுபிஐ செயலிகளில் பிரபலமானதாக உள்ள செயலி என்றால் அது Google Pay என அழைக்கப்படும் G Pay தான். இந்த நிலையில், இந்த G Pay சேவையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 4, 2024 முதல் G Pay சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டும் G Pay சேவை தொடர்ந்து வழக்கம் போல செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூகுள் அனைத்து பயனர்களையும் Google Wallet-க்கு மாறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தண்ணீரில் வீசப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : மேற்கு வங்கத்தில் தொடரும் மோதல் !