உலகம்
ஆபாச நடிகை அளித்த புகார் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு !
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2006-ம் ஆண்டு தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றச்சாட்டை கடந்த 2016-ம் ஆண்டு சுமத்தினார். மேலும், தனது அனுமதி இல்லாமல் அவர் என்னிடம் தவறாக நடந்தார் என்றும் அவர் கூறியிருந்தார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து பேசாமலிருக்க ஸ்டோர்மி டேனியேலுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்களை சட்டத்துக்கு புறமாக கொடுத்ததாக ஸ்டார்மி புகார் அளித்தார். ஆனால் அதனை விசாரிக்கையில் அந்த பணம் ட்ரம்பின் வழக்கறிஞருக்கு கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது.
இதுகுறித்த விசாரணை மன்ஹேட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றதுஇந்த வழக்கில் டிரம்ப் மீதுள்ள குற்றசாட்டுகள் சில நிரூபணம் ஆகியுள்ளதால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் சமயம் நெருங்குவதால் அவர் மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடரும் என கூறி, நியூயார்க் நீதிபதி டொனால்ட் ட்ரம்பை எந்தவித முன்-விசாரணை கட்டுப்பாடுகளும் இல்லாமல் காவலில் இருந்து விடுவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் தண்டனை குறித்த விவரங்கள் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய "நான் மிகவும் அப்பாவி, இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர்"என்று கூறியுள்ளார். எனினும் விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு டிரம்ப்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!