உலகம்
இந்தியாவிற்கு ஏற்பட்ட மற்றொரு தலைகுனிவு : சர்வதேச செய்தியான பிரஜ்வல் பாலியல் விவகாரம் - குவியும் கண்டனம்!
கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியின் எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna), ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். (பிரஜ்வல், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனும் ஆவார். )கடந்த ஏப்.26-ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. அதோடு அந்த வீடியோக்களில் கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரிகளும், பணிப்பெண்களை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பல பெண்களையும் மிரட்டி தனது பாலியல் ஆசைக்கு இணங்குமாரு பிரஜ்வல் கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியதோடு, மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவர் வெளிநாடு தப்பி சென்றுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று JDS கூட்டணி கட்சியான பாஜகவும் அறிவித்துள்ளது அரசியல் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து பிரஜ்வல் மீது போலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வல் மீதும் அவரது தந்தை HD ரேவண்ணா மீதும் பணிப்பெண் ஒருவர் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக பாலியல் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரஜ்வல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கட்சியில் இருந்து மட்டுமின்றி தேர்தலில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததையடுத்து, அவரை அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இந்த சூழலில் பிரஜ்வலின் ஆபாச வீடியோ தொடர்பான பென் டிரைவை, பாஜக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் தான்தான் கொடுத்ததாக, பிரஜ்வலின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
தொடர்ந்து பிரஜ்வலின் பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆங்கில செய்தி தொலைக்காட்சியான CNN செய்தியில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதாவது ‛India Votes' என்ற பெயரில், இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தல் தொடர்பான செய்திகளை CNN செய்தி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் முக்கிய சம்பவங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்திகளில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை விவகாரமும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மானம் சர்வதேச அளவில் பறக்கவிடுவது இந்திய மக்களிடையே பாஜக மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் விவகாரம், மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த வெறுப்பு பேச்சு என பாஜகவின் செயல்களுக்கு சர்வதேச மீடியாக்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்த விவகாரமும் சர்வதேச அளவில் சென்றுள்ளது இந்தியாவிற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!