உலகம்
உயிருடன் இருக்கும் பிரிட்டன் மன்னரின் இறுதி சடங்குக்கு ஏற்பாடு : ஊடகத்தில் வெளியான செய்தியால் அதிர்ச்சி !
உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது. அந்த அளவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிட்டனுக்கு காலணிகள் இருந்தது.
20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில நாட்களுக்கு முன்னர் மரணடைந்தார்.
அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால், சார்லஸ் பதவியேற்கும் போது, அந்நாட்டு குடிமக்கள் சிலர் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக குரல் எழுப்பி கையில் "என் அரசனில்லை" (புதிய அரசர் சார்லசை ஏற்கமறுத்து) என்ற பதாகைகளையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்து வந்த நிலையில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போதே மன்னர் சார்லஸ் புற்றுநோயால் செயல்படமுடியும் போகும் பட்சத்தில் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம் பிரிட்டனின் அடுத்த மன்னராக பொறுப்பேற்பார் என்ற பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில், பிரிட்டனின் உயிருடம் இருக்கும் பிரிட்டன் மன்னர் சார்லசின் இறுதி சடங்குக்கு Operation Menai Bridge என பெயரிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அந்த செய்தியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் உயிரிழக்க வாய்ப்புள்ளது.
ஒரு வேலை அப்படி நடந்தால் அதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து பக்கிங்காம் அரண்மனை திட்டமிட்டு வருவதாகவும், இதற்கு Operation Menai Bridge என பெயரிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?