உலகம்

நான்கு மாத தொடர் முற்றுகை... முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா - பின்வாங்கிய உக்ரைன் படைகள் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தொடவுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.எனினும் இந்த போரில் தற்போதுவரை ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது.

இந்த நிலையில், பல மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் அவ்டிவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது. சுமார் நான்கு மாதம் அளவு இந்த நகரை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வந்தன. எனினும் நகரில் இருந்த உக்ரைன் படையினருக்கு போதிய அளவு உணவு, ஆயுத உதவிகள் வராத காரணத்தால் அந்த நகரை விட்டு உக்ரைன் படைகள் பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக அந்நகரத்திலிருந்து உக்ரைன் படைகளை வாபஸ் பெறுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார். கடந்த சில மாதமாக ரஷ்யா தரப்பில் அதிக இழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த வெற்றி ரஷ்ய படைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

Also Read: சாதனை படைத்தவுடன் அஸ்வினுக்கு தெரியவந்த அதிர்ச்சி சம்பவம்: போட்டியிலிருந்து பாதியில் வெளியேற காரணம் என்ன?